சென்னை, சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 118.9 கி.மீ. நீளத்திலான 3 வழித்தடங்களை கொண்ட கட்டம் 2-ன் பணிகள் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பீட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான தடத்தை, ஏற்கெனவே உள்ள வடபழனி மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்படும் வகையில் 14.64 கிமீ. நீளத்திலான, 11 மெட்ரோ ரெயில் நிலையங்களைக் கொண்ட கட்டம் 2-ன் முதல் பகுதி, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது. சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம், ஆவடி வழியாக கோயம்பேடு முதல் பட்டாபிராம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருப்பெரும்புதூர் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையில் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் திட்டங்கள் மத்திய அரசின் தீவிர பரிசீலனையின் கீழ் உள்ளன. இந்த கூடுதல் மெட்ரோ ரெயில் வழித்தடத் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவான ஒப்புதல் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கர்நாடகா மாநிலம் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ ரெயில்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு ஆகிய 2 அரசுகளுடனும் இணைந்து தமிழக அரசு முன்னெடுத்து வருவதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-keen-on-metro-rail-project-from-hosur-to-karnataka




