திருத்தணி, திருத்தணி முருகன் கோவில் மாடவீதியில் தீபம் ஏற்றும் இடத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முருகன் கோவில் திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். சில பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கு மாட வீதியில் வேல் மண்டபம் எதிரே நெய்தீபம் ஏற்றும் இடம் கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெய் தீபம் ஏற்றி வழிபாடு அந்த இடத்தில் பக்தர்கள் காலை 6 மணி முதல் இரவு, 8.30 மணி வரை நெய்தீபம், நல்லெண்ணெய் தீபம் மற்றும் அரிசி மாவு தீபம் ஏற்றி தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர். நேற்று காலை 10.30 மணியளவில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நெய் தீபம் ஏற்றிக் கொண்டிருந்தனர். திடீர் தீ விபத்து அப்போது திடீரென நெய்தீபங்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்ததால், அங்கு இருந்த பக்தர்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓடினர். அதே நேரத்தில் அங்கு பணியில் இருந்து கோவில் ஒப்பந்த ஊழியர்கள் உடனடியாக தண்ணீரை கொண்டு தீயை அணைத்தனர். குறித்த நேரத்தில் தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அதே இடத்தில் நெய் தீபம் ஏற்றுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் தீபம் ஏற்றும் இடத்தில் கற்பூரம் மற்றும் எண்ணெய் அதிக அளவில் இருந்ததால் விளக்குகளில் இருந்து தீ பரவியது என்பது தெரிய வந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/fire-accident-at-tiruttani-murugan-temple-lamp-area




