சென்னை, தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டைப் பெருமளவில் ஊக்குவிக்கும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் சார்ஜிங் உள்கட்டமைப்பை அதிரடியாக விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, மின்சார வாகன சார்ஜிங் வசதிகளுக்கு தனியாக துணை மின்மீட்டர் அமைக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசு மாநிலம் முழுவதும் வரும் 2031-ஆம் ஆண்டிற்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. கூடுதல் செலவின்றி புதிய வசதி தற்போதுள்ள நடைமுறைகளின்படி, புதிய சார்ஜிங் நிலையங்களை அமைக்க கூடுதல் மின் உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது. சார்ஜிங் வசதி அரசின் இந்த புதிய முடிவின் மூலம், கூடுதல் மின் உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய தேவையின்றி, மிக குறைந்த முதலீட்டிலேயே இ.பி சார்ஜிங் வசதிகளை எளிதாக அமைத்துவிட முடியும். உயர் மட்ட குழு மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பிற்காக மட்டுமே தனியாக புதிய மின் சேவை இணைப்பைப் பெறவும் நுகர்வோருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. சார்ஜிங் நிலையங்களை வைப்போருக்கு பெரும் நிம்மதி தரும் வகையில், தற்போது நடைமுறையிலுள்ள நிலைக்கட்டணம் மற்றும் குறைந்தபட்ச மாதாந்திர கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்களிக்க அல்லது அந்த கட்டணங்களைக் கணிசமாக குறைக்க வேண்டும் என அரசுக்கு உயர் மட்ட குழு பரிந்துரை செய்ய முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. அரசின் இந்த சலுகைகள் மற்றும் கொள்கை திருத்தங்கள் மூலம், தமிழ்நாட்டில் மின்வாகன சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-decides-to-set-up-20000-electric-vehicle-charging-stations-by-2031




