சென்னை, தங்கம் விலை கடந்த 20-ந்தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 285-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 280-க்கும் விற்பனை ஆனது. அதன் பிறகு 21-ந்தேதியில் இருந்து விலை குறைந்து வருவதை பார்க்க முடிகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்து இருந்தது. அதன்படி, நேற்று கிராமுக்கு ரூ.135-ம், பவுனுக்கு ரூ.1,080-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்துக்கும். ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 10-க்கும். ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-rise-slightly-what-is-the-situation-today




