இந்த வார விசேஷங்கள் இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு: ஜூலை 14-ந் தேதி (செவ்வாய்) * அமாவாசை. * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். * பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு. * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீசண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு. * சமநோக்கு நாள். 15-ந் தேதி (புதன்) * நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி வருசாபிஷேகம். * ராமநாதபுரம் கோதண்டராமர் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா. * மேல்நோக்கு நாள். 16-ந் தேதி (வியாழன்) * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் முளைக்கொட்டு உற்சவம் ஆரம்பம். * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தெப்ப உற்சவம். * கீழ்நோக்கு நாள். 17-ந் தேதி (வெள்ளி) * சதுர்த்தி விரதம். * மதுரை மீனாட்சி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் திருவீதி உலா. * மிலட்டூர் விநாயகப்பெருமான் புறப்பாடு. * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். * கீழ்நோக்கு நாள். 18-ந் தேதி (சனி) * சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித் தவசு ஆரம்பம். * ராமநாதபுரம் கோதண்டராமர் சேஷ வாகனத்தில் பவனி. * திருமயம் ஆண்டாள் புறப்பாடு. * மன்னார்குடி ராஜகோபால சுவாமி, காரமடை அரங்கநாதர், திருச்சேறை சாரநாதர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம். * கீழ்நோக்கு நாள். 19-ந் தேதி (ஞாயிறு) * சஷ்டி விரதம். * சங்கரன்கோவில் கோமதியம்மன் உற்சவம் ஆரம்பம். * ராமநாதபுரம் கோதண்டராமர் திருக்கல்யாணம். * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை. * மேல்நோக்கு நாள். 20-ந் தேதி (திங்கள்) * சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. * மதுரை மீனாட்சி அம்மன் விருட்சப சேவை. * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம். * சமநோக்கு நாள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/aanmigam-this-weeks-special-events-14th-july-2026-to-20th-july-2026




