சென்னை, வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய ராயலசீமா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாளை மறுநாள் வடக்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 21, 22-ந்தேதிகளில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது வலுப்பெற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/likelihood-of-low-pressure-area-intensifying-in-the-bay-of-bengal-meteorological-department




