புதுடெல்லி பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க வகை செய்யும், பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா, 2026 தொடர்பாக நேற்று விவாதம் நடைபெற்றது. எனினும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது அடக்குமுறையை கையாண்ட விவகாரம் தொடர்பாகவும் மேகதாது விவகாரம் தொடர்பாகவும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் நிறைவேற்றம் இதனால், அவை நண்பகல் 12 மணி வரையும், பின்னர் 2 மணி வரையும், ஒத்திவைக்கப்பட்டது. அவை 2 மணியளவில் மீண்டும் கூடியது. இதில், குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேறியது. தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேறிய பின்பு மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், ஒரு மாதத்திற்கும் மேலாக வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போராட்டத்திற்கு ஒரு தெளிவான சட்ட ரீதியிலான பதில் கிடைத்து உள்ளது. மாநிலங்களவையில் தாக்கல் இந்த சூழலில், அவையில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நண்பகல் 12 மணி வரையும், பின்னர் பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் 2 மணி அளவில் கூடியபோது, பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மத்திய புவி அறிவியல் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங், மசோதாவை தாக்கல் செய்து பேசி வருகிறார். எதிர்க்கட்சிகளின் தொடர் இடையூறுகளுக்கு மத்தியில், 10 மணிநேர விவாதத்திற்கு பின்னர் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது என அப்போது அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து மசோதா தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. ரூ.10 கோடி அபராதம் இதன்படி, வினாத்தாள் கசிவில் ஈடுபடும் தனிநபர்கள் கண்டறியப்பட்டால், அவருக்கு ரூ.50 லட்சம் அபராதத்துடன் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். வினாத்தாள் கசிவில் ஈடுபட கூடிய அமைப்புகள் கண்டறியப்பட்டால் ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/general-examinations-malpractice-prevention-amendment-bill-tabled-in-rajya-sabha




