வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான 6 வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை நடிகர் எஸ்.ஜே.சூர்யா திரும்ப பெற்றார். கடந்த 2002-03 முதல் 2009-10 வரையிலான ஆறு நிதியாண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. மனுக்கள் தள்ளுபடி இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்கள் 2022-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அதே காரணங்களை முன்வைத்து தற்போது மீண்டும் வழக்குகளில் இருந்து விடுவிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் வாதிடப்பட்டது. திரும்பப் பெற்ற எஸ்.ஜே.சூர்யா இதையடுத்து, இந்த ஆறு வழக்குகளையும் எஸ்.ஜே.சூர்யா எதிர்கொண்டே ஆக வேண்டும் என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், மனுக்களை ஏற்க இயலாது என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து ஆறு மனுக்களையும் எஸ்.ஜே.சூர்யா தரப்பில் திரும்பப் பெற்றதையடுத்து அவற்றை நீதிபதி தள்ளுபடி செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-sj-surya-withdraws-income-tax-petition




