சென்னை, தற்போது ‘புலவர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பாரதிராஜாவின் திரை தோற்றத்தை மீண்டும் ரசிகர்கள் காணும் வாய்ப்பு கிடைத்திருப்பதால், இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் கிராமத்து மணம் கமழும் கதைகளையும், எதார்த்தமான மனிதர்களையும் திரையில் உயிர்ப்பித்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், தமிழ் திரையுலகில் அழியாத தடம் பதித்துள்ளார். ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாரதிராஜா, இந்த ஆண்டு ஜூன் 10-ந் தேதி காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி, அவரை நேசித்த ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக அமைந்தது. அவரது படைப்புகளும், கதாபாத்திரங்களும் இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்பட்டு வரும் நிலையில், அவர் கடைசியாக நடித்த திரைப்படம் தற்போது திரைக்கு வர தயாராகி உள்ளது. ‘புலவர்’ படத்தின் டீசர் வெளியீடு முருகையா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘புலவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பாரதிராஜா நடித்த கடைசி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரேச்சல் ரெபெக்கா, ஹலோ கந்தசாமி, ரவிச்சந்திரன், வெற்றிவேல் ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது ‘புலவர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பாரதிராஜாவின் திரை தோற்றத்தை மீண்டும் ரசிகர்கள் காணும் வாய்ப்பு கிடைத்திருப்பதால், இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. செப்டம்பர் 25-ல் திரைக்கு வருகிறது பாரதிராஜாவின் கடைசி திரைப்படம் என்பதால் ‘புலவர்’ படத்திற்கு இயல்பாகவே ஒரு தனி எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அவரது ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சாதாரண திரைப்படமாக இல்லாமல், அவர் திரையில் தோன்றும் கடைசி நினைவாகவும் அமைய உள்ளது. வருகிற செப்டம்பர் 25-ந் தேதி ‘புலவர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. பாரதிராஜாவின் இறுதிப் படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/teaser-release-of-the-film-pulavar-the-last-movie-starring-bharathiraja



