கோவை, நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடரில் நடந்தது என்ன? என்பது தொடர்பான விளக்கக்கூட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் கோவையில் நடைபெற்றது. இதற்கு கோவை மாநகர் மாவட்ட தலைவர் பி.விஜயகுமார் தலைமை தாங்கினார். வி.எம்.சி.மனோகரன், மாவட்ட தலைவர்கள் ரங்கராஜன் (வடக்கு), சக்திவேல் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு விளக்கம் அளித்தனர். அதைத்தொடர்ந்து கரூர் எம்.பி. ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:- நாடாளுமன்றத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் 543 தொகுதிகள் தான் இருக்க வேண்டும், இதில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெளிவாக உள்ளார். அதன் அடிப்படையில் தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்தியில் பா.ஜனதா ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்தியா கூட்டணியில் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர். அதில் எந்த குழப்பமும் இல்லை. ராகுல் காந்தியால் மட்டுமே பிரதமர் மோடியை வீழ்த்த முடியும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் எம்.பி.க்களுக்கு என தனியாக அலுவலகம் இல்லை. இதனால் பொதுமக்களை சந்திப்பதில் சிரமம் உள்ளது. எனவே ஒவ்வொரு தொகுதியிலும் எம்.பி.க்களுக்கு தனி அலுவலகத்தை தமிழக அரசு கட்டிக்கொடுக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட ஒரு கல்லை கூட வைக்க விடமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-confusion-that-rahul-gandhi-is-the-prime-ministerial-candidate-mp-jothimani



