சுற்றுலா பஸ் ஒன்று நேற்று இரவு டெல்லி நொய்டாவில் இருந்து கிளம்பி உத்தரப்பிரதேசத்தில் உள்ள மஹோபா என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது. பஸ் கிரேட்டர் நொய்டாவில் யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஜெவார் விமான நிலையம் அருகில் இன்று அதிகாலையில் திடீரெனத் தீப்பிடித்துக்கொண்டது. அந்த நேரத்தில் அனைத்துப் பயணிகளும் உறக்கத்தில் இருந்தனர். இதனால் பயணிகளால் பஸ் தீப்பிடித்தவுடன் தப்பிக்க முடியவில்லை. இதனால் தீயில் கருகி 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல பயணிகள் பஸ் ஜன்னல் வழியாக வெளியில் குதித்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டனர். விரைவுச்சாலையின் ஓரத்தில் பஸ் கொழுந்துவிட்டு எரிவதையும், தீப்பிழம்புகள் அதை வேகமாகச் சூழ்ந்து இருந்ததையும் காண முடிந்தது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பஸ் தீயில் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. என்ன காரணத்தால் தீவிபத்து ஏற்பட்டது என்று தெரியவில்லை. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். படுக்கை வசதி கொண்ட அந்தப் பஸ்சில் தீப்பிடித்தபோது 30 பயணிகள் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணியைத் தீவிரப்படுத்தி காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதி கிடைக்க உதவும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். தீப்பிடித்த பஸ் தீவிபத்தில் தப்பித்த பயணி ஒருவர் இது குறித்து கூறுகையில், ''யாரோ கதவைத் தட்டியபோது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். நான் எழுந்தபோது, ஏற்கனவே ஒரு பெரிய கூட்டம் இருந்தது. நான் எனது உடைமைகள் எதையும் எடுக்கவில்லை. நான் என் காலணிகளைக் கூட போடவில்லை. நான் எனது தொலைபேசியை எடுத்துக்கொண்டேன். யாரோ ஒருவர் என்னை வெளியே இழுத்துவிட்டனர். அதற்குப் பிறகு எனக்கு எதுவும் நினைவில்லை. அந்த இடமே புகை மண்டலமாக இருந்தது. எங்கும் குழப்பமான சூழல் நிலவியது, வெளியேறுவது மிகவும் கடினமாக இருந்தது. புகை அதிகமாக இருந்ததால் எதுவும் தெரியவில்லை. உள்ளே இருந்தவர்கள் மூச்சுத்திணறினர். மிகச் சிலரே தப்பினர். அந்த நெரிசலுக்கு மத்தியிலும் போராடி வெளியேற முடிந்தவர்களால் மட்டுமே தப்பிக்க முடிந்தது. எனக்குப் பின்னால் பலர் இருந்தனர்'' என்றார். மற்றொரு பயணி இது குறித்து கூறுகையில், ''நான் தூங்கிய பிறகு, பேருந்து தீப்பிடித்துவிட்டது என்று யாரோ என்னை எழுப்பினர். நாங்கள் அனைவரும் வெளியேற முயன்றோம். ஆனால் நிறைய புகை இருந்தது" என்றார். சோளிங்கர்: பேருந்து மோதி விபத்து - தந்தை, மகள் பலியான சோகம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/accidents/tourist-bus-catches-fire-9-sleeping-passengers-die-passengers-jump-out-of-windows




