புது டெல்லி, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க, இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மேற்கொண்டு வருகிறது. இதன் 3-வது கட்ட பணிகளின் முடிவில், பல கோடிக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். முதல் கட்டம் கடந்த ஆண்டு பீகாரில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட பணி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. 14 மாநிலங்களில் வரைவுப்பட்டியல் இதில் திரிபுரா, நாகாலாந்து தவிர 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர், பணி முடிவடைந் ததை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நாகாலாந்தில் வருகிற 20-ந்தேதியும், திரிபுராவில் அக்டோபர் 21-ந்தேதியும் வெளியிடப்படுகிறது. மராட்டியம், டெல்லிக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது. மொத்தம் உள்ள 36.08 கோடி வாக்காளர்களில் 29.93 கோடி வாக்காளர்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளனர். 6.15 கோடி வாக்காளர்கள் அதாவது 17.04 சதவீதம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மராட்டியம் மராட்டிய மாநிலத்தில் 2.06 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பை மற்றும் மும்பை புறநகரில் 36 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். புனே மாவட்டத்தில் 28 லட்சம் பேரும், நாக்பூர் மாவட்டத்தில் 16 லட்சம் பேரும் வாக்காளர் பட்டியலில் -இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மராட்டியத்தில் முன்பு 9.8 - கோடி வாக்காளர்கள் இருந்தனர். - எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு 7.1 கோடியாக குறைந்துள்ளது. டெல்லி டெல்லியில் 47.70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன்பு 1.45 கோடி யாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது 97.50 லட்சமாக குறைந்துள் ளது. இறப்பு, இடம்மாற்றம், இரட்டைப் பதிவு போன்ற பலவேறு கரணங்களால் எஸ்.ஐ.ஆர்.பணிக்கு பிறகு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/2-06-crore-voters-removed-in-maharashtra-shocking-data-from-election-commission




