சென்னை, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப் படும் என்ற அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த 2 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்க உள்ள நிலையில், இடைத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. ராஜினாமா த.வெ.க. ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே நடைபெற உள்ள இடைத்தேர்தல் என்பதால் ஆட்சியையும், அவர்களின் கொள்கை கோட்பாடுகளையும் அவர்கள் எவ்வாறு செயல்படுத்துகின்றனர் என்பதை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கும் களமாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்த இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றாக வேண்டும் என்பதில் த.வெ.க. தீவிரமாக களப்பணியாற்றி இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளையும் தனதாக்கிக்கொள்ள தீவிரமாக களமாடும். அதேநேரத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்களாக தேர்வானவர்கள் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட இடைத்தேர்தல் என்பதால் அந்தந்த தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வின் செல்வாக்கை இழக்கக்கூடாது என்ப தில் அ.தி.மு.க. தீவிரமாக உள்ளது. ஸ்டாலின் ஆலோசனை அதேபோன்று, தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமா? அல்லது புறக்கணிக்குமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக முடிவு செய்ய இன்று முக ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இடைத்தேர்தலில் போட்டியிடுவது என திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில், திமுக 2ம் பிடித்து தோல்வி அடைந்தது. மதுராந்தகம் தொகுதியில் திமுக 3-ம் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. திமுக வேட்பாளர்கள் பட்டியல் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தால் கட்சி நிர்வாகிகள் சோர்வடைந்துவிடுவார்கள் எனவும் திமுகவை கடுமையாக விமர்சிக்கும் விஜய்க்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால், தேர்தலில் போட்டியிடும் முடிவை திமுக தலைமை எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-decides-to-contest-by-elections-in-maduranthakam-and-dharapuram-constituencies




