அரும்பாக்கம், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் தியாஸ், நேற்று முன்தினம் அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். தீக்காயம் அப்போது சாலையோரத்தில் தரையில் வைக்கப்பட்டிருந்த மின்சார பெட்டியின் மீது தியாஸ் கை உரசியது. இதில் அவனை மின்சாரம் தாக்கியது. இதில் சிறுவனின் இரு கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. வலியால் சிறுவன் அலறினார். அவனது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டு, சிகிச்சைக்காக எழும்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தியாஸ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-as-hand-rubs-against-electrical-box-4-year-old-boy-seriously-injured




