சென்னை, பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா நிம்ரோட் ஆன்டல் இயக்கத்தில் சயின்ஸ்-பிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லர் கதையில் உருவாகும் 'புளுப்ளை' என்ற படத்தில் நடிக்க உள்ளார். 2000ம் ஆண்டு மிஸ் வேல்ட் பட்டத்தை வென்ற நடிகை பிரியங்கா சோப்ரா, 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் சினிமாவில் அறிமுகம் ஆனார். தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ், தனது அடுத்த ஹாலிவுட் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் ரஸ்சல் குரோ உடன் முதல் முறையாக அவர் இணைந்து நடிக்கிறார். 'புளுப்ளை' சயின்ஸ்-பிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லர் 'புளுப்ளை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சயின்ஸ்-பிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லர் படத்தை நிம்ரோட் ஆன்டல் இயக்குகிறார். இதன் திரைக்கதையை டேவிட் பிரிஜெரியோ, வில்லியம் யூபாங்க் மற்றும் கார்லைல் யூபாங்க் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். காங்கோவில் நடக்கும் மர்ம மிஷன் காங்கோ காடுகளை பின்னணியாகக் கொண்ட இந்தப் படம், மர்மமான முறையில் விழுந்து நொறுங்கிய ஒரு விமானத்தை மீட்கும் ரகசிய நடவடிக்கையை மையமாகக் கொண்டு உருவாகிறது. அந்த விமானத்தை மீட்கச் செல்லும் சிறப்புப் படை எதிர்பாராத ஆபத்துகளை சந்திப்பதே கதையின் மையமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதியில் இப்படத்தின் படட்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த ஹாலிவுட் வாய்ப்புகள் இந்தப் புதிய அறிவிப்பை பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதளத்தில் "Onto the next" என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் எஸ்.எஸ். ராஜமவுலியின் வாரணாசி படத்தில் நடித்துவரும் அவர், அதே நேரத்தில் ஹாலிவுட்டிலும் தொடர்ச்சியாக முக்கிய படங்களில் நடித்து வருவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/new-film-for-actress-priyanka-chopra-in-hollywood




