ஏதேன்ஸ், ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதன்படி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், கிரீஸ் உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர், ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து இந்நிலையில், கீரிஸ் நாட்டின் மேற்கு ஏதேன்சில் பசத் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், இன்று காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் நடுவானில் பறந்துகொண்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டர்கள் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கின. இரு ஹெலிகாப்டர்களிம் மொத்தம் 4 பேர் பயணித்த நிலையில் அவர்களின் நிலை என்ன என்று தகவல் வெளியாகவில்லை. ஹெலிகாப்டர்கள் வனப்பகுதியில் விழுந்ததால் மீட்புப்பணியில் போலீசார், ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/greece-two-helicopters-collide-midair




