சென்னை, பொது வாழ்வில் உள்ள பெண்ணை தோற்றம், வாழ்க்கை முறையை வைத்து யாரும் மதிப்பிடக் கூடாது என்று சென்னை மேயர் பிரியா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். தனிப்பட்ட முடிவு இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ஏன் எப்போதும் நான் மட்டுமே? நான் என்ன செய்தாலும் அது ஒரு சர்ச்சையாகிவிடுகிறது. முதல் நாளிலிருந்து இன்று வரை, மிகச் சாதாரண விஷயங்கள் கூட ஒரு பிரச்சினையாக மாற்றப்படுகின்றன. நான் ஒரு பர்கர் சாப்பிட்டால் அது ஒரு பிரச்சினையாகிறது; தலைமுடியை வெட்டிக்கொண்டால் அதுவும் ஒரு பிரச்சினையாகிறது. நான் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும் கேள்விக்குள்ளாக்கப்படுவதோடு, விமர்சனத்திற்கும் உள்ளாகிறது. பொதுவாழ்வில் நான் ஒரு பெண் என்பதாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலோதான் இப்படி நடக்கிறதோ என்று சில நேரங்களில் எனக்குத் தோன்றுகிறது. என்னை பொறுத்தவரை, பெண்ணியவாதிகளும் பெண்களுக்காகக் குரல் கொடுப்பதாக சொல்பவர்களும் எங்கே மறைந்துவிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. அரசியலில் ஈடுபடும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களோ அல்லது மரியாதைக்குத் தகுதியற்றவர்களோ அல்ல. பொதுவாழ்வில் இருக்கும் ஒரு பெண்ணை, அவரது தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மதிப்பிடுவதற்கான உரிமை யாருக்கும் இல்லை. பெண்ணையும் மதிக்க வேண்டும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அதற்கே உரிய கண்ணியமும் சுயமரியாதையும், தனது வாழ்க்கையை தனது விருப்பப்படி அமைத்துக்கொள்ளும் உரிமையும் உள்ளன. மேயர் என்ற பதவியைத் தாண்டி, அந்த பெண்ணையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/whether-i-eat-a-burger-or-get-a-haircut-it-becomes-an-issue-mayor-priya-expresses-her-dismay




