தென்காசி, நடுகல் கல்வெட்டு தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே மலையடிப்பட்டி கிரா மத்தில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பழங்காலத்தை சேர்ந்த பானைகள், தாழிகள், இரும்பு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன. சமீபத்தில் இங்கு படிக்கட்டுடன் கூடிய சங்க கால செங்கல் கிணறு சமீ பத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிணற்றுக்குள் கி.பி. 5-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கல்வெட்டு தற்போது கிடைத்துள்ளது. இதில் பழங்கால தமிழி எழுத்தில் இருந்து வட்டெழுத்தாக உருமாறுகின்ற நிலையுடையதாக எழுத்துகள் உள்ளன. வாசகங்கள் நடுகல்லின் நீளம் 1 மீட்டர், அகலம் 0.30 மீட்டர் ஆகும். இதில் கருக் கண், சுளகன், நன்னங், கொடியன் ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டுள் ளன.இதுகுறித்து அங்கு அகழாய்வு இயக்குனர் எத்திஸ் குமார், அக ழாய்வு துணை பொறுப்பாளர் காளீஸ்வரன் ஆகியோர் கூறுகையில், "தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள நடுகல்லில் எழுதப்பட்டுள்ள வாசகத்தை கூர்ந்து கவனித்தால் இந்த கல்வெட்டானது கருக்கண்சுளகன் மகன் நன்னங்கொடியனுக்காக எழுதப்பட்டதாக பொருள் கொள்ளலாம். இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது" என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tenkasi-5th-century-hero-stone-inscription-discovered-during-the-excavation-at-malaiyadipatti




