சென்னை, தமிழகத்தில், 3,500 சதுரடி வரையிலான குடி யிருப்புகள் கட்ட, சான்று முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம், 2024ல் அமலுக்கு வந்தது. இதன்படி, அதிகாரிகளின் அலைக்கழிப்பு இல்லாமல், பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவது எளிதாகி உள்ளது. இதையடுத்து, 5,000 சதுரடி மனையில், 7,500 சதுரடி வரையிலான தொழிலக கட்டடங்களுக்கு, சுயசான்று கட்டட அனுமதி முறை அமலுக்கு வந்துள்ளது. இதற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, அடுக்கு மாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதை எளிதாக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, தானியங்கி முறையில் கட்டட அனு மதி பெற வழி ஏற்பட்டு உள்ளது. இது குறித்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகரரி ஒருவர் கூறியதாவது: தானியங்கி முறையில் கட்டட அனுமதி வழங்க, புதிய திட்டம் தயாரிக்கப் பட்டு வருகிறது. நில வகைப்பாடு மாற்றம் தேவைப்படாத, அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு இருக்கும் திட்டங்களுக்கு, இதை செயல்படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. கடந்த 2008க்கு முன், சி.எம்.டி.ஏ.,வில், '' - சேனல் என்ற பெயரில், இது போன்ற நடைமுறை இருந்தது. அதன் அடிப்படையில், தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய நடைமுறையை உருவாக்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/automated-building-permit-issuance-new-scheme-in-the-works




