நெல்லை நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மூலச்சி கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 40). இவர் கடந்த 2-ந் தேதி மாலையில் தனது மகன்கள் சின்னதுரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் ரெட்டியார்புரத்தில் இருந்து மூலச்சிக்கு சென்று கொண்டிருந்தார். மாதுடையார்குளம் பகுதியில் சென்றபோது அவரது மோட்டார் சைக்கிள் மீது மர்ம கும்பல் காரை மோதவிட்டனர். அதில் ஜெயராஜ் உயிரிழந்தான். காளிமுத்து, சின்னதுரை ஆகியோர் படுகாயமடைந்தனர். அந்த கும்பல் காளிமுத்துவின் தலையை துண்டித்து கொலை செய்தது. இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த இரட்டைக்கொலையில் மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மகேஷ் (29), குமார் என்ற கொக்கி குமார் (23), ஊர்காடு பகுதியை சேர்ந்த முத்துச்செல்வன் (29), மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த மணிகண் டன் (30), ராஜதுரை (30), முத்துபட்டன் (40) மற்றும் மகாலிங்கம் (24) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மூலச்சியை சேர்ந்த கிருஷ்ணன் (29) என்பவருக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை பிடிப்பதற்காக நேற்று போலீசார் தனியார் அட்டை கம்பெனி அருகே உள்ள 80 அடி கால்வாய் பகுதிக்கு சென்றனர். அங்கு பதுங்கியிருந்த கிருஷ்ணன், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அப்போது, தவறி கீழே விழுந்ததில் அவரது கையில் எலும்பில் முறிவு ஏற்பட்டது. உடனே அவரை கைது செய்த போலீசார், அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கிருஷ்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முக்கிய குற்றவாளியான மகேஷ் என்ற மாடசாமி (36), மூலச்சி என்பவரின் மனைவி விஜயா (37), 17 வயதுடைய சிறுவன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். அதில் விஜயாவையும், 17 வயது சிறுவனையும் நேற்று கைது செய்தனர். கொலை சம்பவத்திற்கான சதித்திட்டத்தில் இவர்கள் இருவரும் பங்கேற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாடசாமி என்பவர் கொழுந்துமாமலை முருகன் கோவில் அருகே பதுங் கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அவர் தப்பிச்செல்ல முயன்றபோது கீழே விழுந்ததில் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட் டது. உடனே அவரை கைது செய்த போலீசார், அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இரட்டைக்கொலையில் இதுவரை பெண், சிறுவன் உள்பட மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் மூலச்சி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/11-people-arrested-so-far-in-nellai-double-murder-case-2-have-broken-arms



