சென்னை, தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு, 7 சதவீத வட்டியில் பயிர் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை, குறித்த காலத்தில் செலுத்தியதும் வட்டி முழுதுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. தற்போது, விவசாயிகள் தங்கள் நிலத்தில் மோட்டார் பம்ப் அமைத்தல், குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைத்தல், நிலத்தை மேம்படுத்துவது, அறுவடை கருவிகள் வாங்குவது உள்ளிட்ட, வேளாண் சார்ந்த மேம்பாட்டு பணிகளுக்காக, 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கடனுக்கு, 9 சதவீதம் வட்டி. புதிய திட்டத்தின் மூலம் இந்தாண்டில், 5,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க, கூட்டுறவு துறை முடிவு உள்ளது. செய்து இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; வேளாண் சார்ந்த மேம்பாட்டு பணிகள், அறுவடை கருவிகள் வாங்க, விவசாயிகள் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதாகவும், அந்த கடனை அடைக்க சிரமப்படுவதாகவும் தகவல் கிடைத்தது. எனவே, அந்த பணிகளை மேற்கொள்வதற்கு ஒருவருக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் வரை, 9 சதவீத வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று, கடன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/loans-up-to-5-lakh-for-agricultural-development-activities-new-scheme-in-cooperative-banks




