காத்மாண்டு, நேபாளத்தில் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 33 பேரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், டிக்-டாக் வீடியோ மூலம் தனது தாயின் இருப்பிடத்தை லண்டன் பெண் ஒருவர் கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நேபாளத்தை உலுக்கிய வெள்ளம் நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால், அங்குள்ள முக்கிய நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பெருவெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் தவித்து வரும் நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 13 வயது சிறுவன், ஒரு பாதிரியார் உட்பட 33 பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து, அவர்களைப் பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக இங்கிலாந்திலிருந்து ஒரு சிறப்பு மீட்புக் குழுவினர் நேபாள தலைநகர் காத்மாண்டுவிற்கு விரைந்துள்ளனர். அவர்கள் அங்கு முகாமிட்டு உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். டிக்-டாக்கில் கிடைத்த துப்பு இதற்கிடையே, இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளிப் பெண்ணான துளசி பட்டேல் என்பவருக்கு ஒரு பெரும் சோதனை ஏற்பட்டது. இவருடைய தாயார் ஹேமங்கினி ஜிதேந்திர பட்டேல் மற்றும் அத்தை ஹேமா சுனில் அமீன் ஆகியோர் திபெத்திற்கு புனித யாத்திரை சென்றிருந்தனர். அப்போது நேபாள எல்லை பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளத்தில் அவர்கள் சிக்கி கொண்டனர். தொடர்பு கொள்ள அனைத்து வழிகளும் துண்டிக்கப்பட்டதால், தாயின் நிலை என்னவென்று தெரியாமல் துளசி பட்டேல் தவித்து வந்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், சமூக வலைத்தளமான டிக்-டாக்கில் யாரோ ஒருவர் பதிவிட்ட நேபாள வெள்ள பாதிப்பு வீடியோவை அவர் தற்செயலாக பார்த்தார். நெகிழ்ச்சி பின்னணி அந்த வீடியோவை உன்னிப்பாக கவனித்த துளசி பட்டேல், வெள்ளம் சூழ்ந்த ஒரு பகுதியில் தவித்து கொண்டிருந்த தனது தாயார் ஹேமங்கினி மற்றும் அத்தையை அடையாளம் கண்டுகொண்டார். அந்த வீடியோ குறித்து படேல் கூறுகையில், "டிக்டாக் வீடியோ நேபாள நேரப்படி புதன்கிழமை காலை 6 மணிக்கு சற்று முன்பு எடுக்கப்பட்டது. எனது தாயாரிடம் ஒரு உள்ளூர் சிம் கார்டு இருப்பதால், ஒருவேளை அவருக்கு சிக்னல் கிடைக்குமோ என்ற நம்பிக்கையில் சுற்றுலா வழிகாட்டிக்கு நாங்கள் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளோம். அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியே கொண்டுவர வேண்டும் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/nepal-floods-daughter-finds-mother-through-tiktok-video




