கரூர், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது. விபத்து - 2 பேர் பலி கரூர் மாவட்டம் குளித்தலை குமாரமங்கலம் அருகே சென்றபோது நெடுஞ்சாலையில் எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரி மீது நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி நேருக்குநேர் மோதியது. இந்த கோர விபத்தில் 2 லாரிகளின் 2 டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-head-on-collision-between-lorries-2-killed




