சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. விவாதத்துக்கு முன்பு முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மிக முக்கியமாக பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது என்றும் முதல்வர் அறிவித்திருக்கிறார். பரந்தூர் விமான நிலையத் திட்டம் இதுசம்பந்தமாக முதல்வர் பேசுகையில்,'மீனம்பாக்கம் விமானம் நிலையம் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாள்கிறது. தொழில் வளர்ச்சிக்கும் சரக்கு போக்குவரத்துக்கும் இன்னொரு விமானம் நிலையம் தேவை. விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் இன்னொரு விமானநிலையத்துக்கான இடம் எடுக்கப்பட வேண்டும். ஆனால், முந்தைய அரசு பரந்தூர் - ஏகனாபுரத்தில் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் கட்ட திட்டமிட்டது. நான் பரந்தூருக்கு நேரில் சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டேன். விக்கிரவாண்டி மாநாட்டிலேயே பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என வாக்குறுதி கொடுத்தேன். CM Vijay விவசாயிகளுடன் என்றும் நிற்பேன். விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு. இரண்டாவது விமான நிலையம் தேவை. அதற்கு விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத மாற்று இடம் தேர்வு செய்யப்படும். பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படுகிறது' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/farmers-are-the-backbone-parandur-airport-project-to-be-dropped-cm-vijay-announces



