சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”சென்னை மாநகராட்சியில் மேயர் அருகில் துணை மேயர் மகேஷ் குமார் அமர வைக்கப்படும் போது, சேலம் மாநகராட்சியில் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் துணை மேயர் சகோதரி சாரதா தேவியின் இருக்கையை மேடையை விட்டு மாற்றி, அவரை சஸ்பெண்ட் செய்த செயல் திமுக மேயர் ராமச்சந்திரனின் மற்றும் திமுகவின் அப்பட்டமான பெண் பிரதிநிதித்துவத்திற்கு எதிரான போக்கை வெளிப்படையாகக் காட்டுகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! பெண்கள் அதிகாரப் பொறுப்புகளுக்கு வரும்போது அவர்களை ஒடுக்கி அவமதிப்பதுதான் திமுக மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் உண்மையான மனநிலையா? மக்களுக்கு ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றாமல் நாற்காலியை வைத்து பழிவாங்கும் அரசியல் செய்யும் இவர்களின் அப்பட்டமான பெண் விரோதப் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சேலம் திமுக மேயரின் இந்த செயலை வண்மையாக கண்டிக்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை மேயர் சகோதரி திருமதி சாரதா தேவி அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை நிற்கும்; எத்தனை தடைகள் வந்தாலும் மக்களுக்கான மக்கள் பணியைத் தொடர்ந்து உறுதியோடு முன்னெடுக்கும்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/suspending-a-democratically-elected-female-deputy-mayor-manickam-tagore-condemns-the-move




