அல்வார், ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில், சுதந்திர தின விழாவிற்கு பிறகு பெற்றோரிடம் சொல்லாமல் 200 மாணவ, மாணவிகளை தடை செய்யப்பட்ட அணைக்கு அழைத்து சென்று, அரைகுறை ஆடையுடன் மாணவிகளுடன் குளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சுதந்திர தின விழா ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் தானாகாசி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழா முடிந்ததும், பள்ளியின் தலைமை ஆசிரியர் லால் சந்த் மீனா என்பவர், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 200 மாணவ, மாணவிகளை ஒரு சுற்றுலா பகுதிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார். பெற்றோருக்கு தெரியாது இதற்காக அவர் மாணவர்களின் பெற்றோரிடம் எந்தவித முன் அனுமதியும் பெறவில்லை. மேலும், பள்ளி பெண் ஆசிரியர்கள் யாரையும் உடன் அழைத்து செல்லாமல், மாணவர்களை மட்டும் தனியாக அழைத்துக்கொண்டு சரிஸ்கா காட்டு பகுதியை ஒட்டியுள்ள 'படாஜ் அணைக்கு' சென்றுள்ளார். இந்த அணை சுமார் 11 அடி ஆழம் கொண்டது என்பதால், கடந்த 4 ஆண்டுகளாக அங்கு மக்கள் செல்லவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. அரைகுறை ஆடையுடன் குளியல் தடை உத்தரவையும் மீறி மாணவர்களை அணைக்கு அழைத்து சென்ற பள்ளி தலைமை ஆசிரியர் லால் சந்த் மீனா, திடீரென தனது ஆடைகளை களைந்துவிட்டு அரைகுறை ஆடையுடன் அணைக்குள் இறங்கினார். பின்னர், அங்கிருந்த மாணவிகளையும் தண்ணீருக்குள் அழைத்து கொண்டு, அவர்களுடன் சேர்ந்து குளித்துள்ளார். அப்போது, நீச்சல் கற்று தருவதாக கூறி மாணவிகளிடம் அவர் அநாகரீகமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆபத்தான அந்த அணையில் மாணவர்களுக்கு எந்தவித உயிர் காக்கும் பாதுகாப்பு உடைகளும் வழங்கப்படவில்லை. வீடியோ வைரல் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளுடன் அரைகுறை ஆடையுடன் அணையில் குளிக்கும் காட்சிகள் அங்கிருந்த சிலரால் வீடியோ எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோ காட்டுத்தீ போல பரவி, பொதுமக்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆத்திரமடைந்த கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து கல்வி இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக பள்ளி தலைமை ஆசிரியர் லால் சந்த் மீனாவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/government-school-principal-suspended-for-bathing-in-dam-with-students-in-semi-nude




