சென்னை, மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் (MMA) உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பிரேசிலை சேர்ந்த பிரபல வீரர் ஆலன் நாசிமெண்டோ(34) காலமானார். தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கிறார். சிறப்பான எம்எம்ஏ பயணம் 2011-ம் ஆண்டு எம்எம்ஏ போட்டிகளில் அறிமுகமான ஆலன் நாசிமெண்டோ, தனது முதல் 10 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்று கவனம் ஈர்த்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தனது கெரியரில் மொத்தம் 29 போட்டிகளில் பங்கேற்று 22 வெற்றிகளை பதிவு செய்ததார். யுஎப்சியில் முத்திரை 2021-ம் ஆண்டு யுஎப்சியில் அறிமுகமான ஆலன் நாசிமெண்டோ, ஜேக் ஹாட்லி, கார்லோஸ் ஹெர்னாண்டஸ் மற்றும் கோடி டர்டன் உள்ளிட்ட முன்னணி வீரர்களை தோற்கடித்து தனது திறமையை நிரூபித்தார். ரசிகர்கள் அதிர்ச்சி ஆலன் நாசிமெண்டோவின் திடீர் மறைவு, உலகம் முழுவதும் உள்ள யுஎப்சி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து, அவரது சாதனைகளை நினைவுகூர்ந்து வருகின்றனர். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/othersports/bad-news-for-the-sports-world-34-year-old-player-passes-away-in-his-sleep




