'நீட்' தேர்வுக்கு எதிராகவும், சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லி உள்பட நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் மாணவர் சங்கங்கள், அமைப்புகள் சார்பில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை ஜோதிகாவும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டகிராமில் ஜோதிகா பதிவிட்டு இருப்பதாவது: பெருமைப்படுகிறோம் தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள்; ராஜினாமா செய்யுங்கள்; நான் மாணவர்களுடனும் நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் பொறுப்புணர்ச்சியுடன் ஒரு ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன்; ஒரு சீர்திருத்தக் கல்விக்காக நிற்கிறேன். தடையின்றி வெளிப்படையாக இருக்கும் ஜென்சி தலைமுறையினரே, உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம். நன்றி சி.ஜே.பி நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள் சோனம் வாங்சுக், அபிஜீத் தீப்கே மற்றும் சௌரவ் தாஸ், தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை உங்களைப் போல வளர்க்க விரும்புகிறோம்; எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி சி.ஜே.பி" என்று பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/resign-dharmendra-pradhan-actress-jyothika-posts-on-instagram




