சென்னை, முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசிய புகாரில் திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது காவல்துறை. மிரட்டல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெறுப்புணர்வை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க… — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 20, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-will-be-taught-a-lesson-through-democratic-means-kanimozhi-mp




