சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த 50 வயதான விஜயராஜா ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் பழுது பார்க்கும் வேலை செய்து வந்திருக்கிறான். மேலும், சனீஸ்வரா பரிகார நிலையம் என்கிற பெயரில் போலியாக மாந்திரீக மையம் ஒன்றையும் நடத்தி வந்திருக்கிறான். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறுமி ஒருவர் விநாயகர் வழிபாட்டிற்கான நன்கொடை கேட்டு மாந்திரீக நிலையத்திற்குச் சென்றிருக்கிறார். அந்தச் சிறுமியிடம் தகாத முறையில் விஜயராஜா நடக்க முயற்சி செய்திருக்கிறான். பதறிய அந்தச் சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். இது குறித்து தன்னுடைய சக தோழியான மற்றொரு சிறுமியிடம் கூறியிருக்கிறார். தன்னிடமும் அந்தச் சாமியார் இதேபோன்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சி செய்ததாக அந்தச் சிறுமியும் கூறியிருக்கிறார். இதுகுறித்து சிறுமிகள் இருவரும் பெற்றோரிடம் கூறியிருக்கிறார்கள். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், விஜயராஜாவின் மாந்திரீக பரிகார நிலையத்திற்குச் சென்றுள்ளனர். போலி சாமியார் விஜயராஜா பூட்டப்பட்டிருந்த நிலையில், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். பள்ளி மாணவிகளின் சீருடைகள் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்துள்ளனர். மேலும், அங்கிருந்த ஒரு லேப்டாப்பை எடுத்து பார்த்தபோது, சாமியார் விஜயராஜா ஏராளமான பள்ளி சிறுமிகள் மற்றும் பெண்களிடம் ஆபாசமாக இருக்கும் 50- ற்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்து, பதுங்கியிருந்த விஜயராஜாவைச் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்துள்ளனர். பரிகாரம் என்கிற பெயரில் சிறுமிகள் மற்றும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு 50- ற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் எடுத்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலி சாமியார் விஜய் ராஜாவிடம் மகளிர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். `பணம் தர்றேன், கேஸ் கொடுக்காதீங்க…' - ஆசிரியரின் தொடர் பாலியல் அத்துமீறல்; அரசுப்பள்ளி மாணவி தற்கொலை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/salem-fake-priest-sexual-abuse-atrocities




