திருச்சி, தங்கத்தை பேஸ்ட்டாக மாற்றி உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தங்கம் கடத்தல் சிங்கப்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த 2 ஆண் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி, உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2 பேர் கைது இதையடுத்து அவர்களிடம் இருந்து 591 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.90.33 லட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக 2 பயணிகளையும் சுங்கத்துறையினர் கைது செய்து, தங்கம் கடத்தல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/two-arrested-for-smuggling-gold-by-turning-it-into-paste-hiding-it-in-underwear




