சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. இப்போது சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் 90 டாலர் அருகே வர்த்தகமாகி வருகிறது. Brent கச்சா எண்ணெய் 99-100 டாலர் என ஒரு பீப்பாவிற்கு வர்த்தகமாகி வருகிறது. தற்போது மேலும் இந்தக் கச்சா எண்ணெய் விலைக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. ஈரான் சமீபத்தில் அமெரிக்காவிடம் 7 கோரிக்கைகளை வைத்துள்ளது. அது நிறைவேற்றப்பட்டால் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்படும் என்று கடந்த வார இறுதியில் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் காலிபாப் கூறியிருந்தார். கச்சா எண்ணெய்விக்கற விலைக்கு தங்கத்தில் முதலீடு செய்ய முடியவில்லை தானே; 'இந்த' உலோகத்துல பார்வையை திருப்புங்க! 7 நாள்களுக்குள். தற்போது Kyodo என்னும் ஜப்பான் செய்தி நிறுவனத்தின், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர், “அமெரிக்கா ராணுவ அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்தால், அடுத்த ஏழு நாள்களுக்குள் ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஈரான் திறக்கும்” என்று தகவல் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீர்ச்சந்தி உலக எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பாதை. இது மூடப்பட்டதுதான் எண்ணெய் விலை உயர்விற்கும், தட்டுப்பாட்டிற்கும் மிக முக்கிய காரணம். ஆகையால், ஹார்முஸ் நீர்ச்சந்தி திறந்து, அங்கே நின்றுகொண்டிருக்கும் எண்ணெய் டேங்கர்களின் போக்குவரத்து சரியானால் கச்சா எண்ணெய் விலையும் பழைய நிலைக்குத் திரும்பும். தட்டுப்பாடும் சரியாகும். அமெரிக்காவில் ஈரான்! இன்று அமெரிக்காவில்தான் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இருக்கிறார். ஐக்கிய நாடுகளின் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயார்க் சென்றிருக்கிறார். ஆனால், இவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்திக்கும் எந்தத் திட்டமும் இல்லை. ஆனால், அங்கே ஈரான் அதிகாரிகளுக்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணிநேரப் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அந்தப் பேச்சுவார்த்தை நன்றாகவே இருந்திருக்கிறது. இதை ட்ரம்பே உறுதி செய்திருக்கிறார். இதையெல்லாம் வைத்து ஹார்முஸ் நீர்ச்சந்தி விவகாரத்தில் சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பலாம். ரூ.10,000 சம்பள பாக்கி; ரூ.150-க்கு பெட்ரோல் வாங்கி, ரூ.24 கோடி மதிப்பிலான பொருள்களை எரித்த தொழிலாளி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/iran-may-reopen-hormuz-in-7-days-oil-prices-could-fall




