காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கை, கால்களைக் கட்டிப்போட்டு மர்ம நபர்கள் 2 பேர் 8 சவரனை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை தணிகைவேல் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 36) இவர், ஒரகடத்தில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தீபா, 32. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சங்கர் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டார். காலை 9:00 மணியளவில் குழந்தைகளை பள்ளியில் விட்டு தீபா வீடு திரும்பினார். அப்போது, அவரை பின்தொடர்ந்து ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் வீட்டுக்குள் அத்துமீறி திடீரென நுழைந்துள்ளனர். அவர்கள் தீபாவின் கை, கால்களை கயிற்றால் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர். பின், அவரது தாலி செயின், கம்மல் உள்ளிட்ட 8 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டனர். தொடர்ந்து, மாடி அறையில் இருந்த பீரோவை திறந்து, 10,000 ரூபாயை எடுத்து சென்று தப்பித்து ஓடிவிட்டனர். கொள்ளையடுத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறும்போது, மர்ம நபர்கள் கதவை வெளிப்புறமாக பூட்டிச் சென்றனர். இதையடுத்து, தீபா சிரமப்பட்டு கயிற்றை அவிழ்த்து, மாடிக்கு சென்று கூச்சலிட்டு அருகில் வசிப்போரை அழைத்தார். அவர்கள் வந்து தீபாவை மீட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காஞ்சி தாலுகா போலீசார், மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். ஒரிக்கை தனிகைவேல் நகர் பகுதியில் ஆட்டோவில் வந்த 2 பேர், வீட்டில் தனியாக இருந்த தீபா என்பவரின் கை, கால்களைக் கட்டிப்போட்டு 8 சவரன் நகை மற்றும் ரூ.10,000 பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tension-in-kanchipuram-woman-tied-up-in-broad-daylight-8-sovereigns-of-jewellery-stolen




