Articolo completo
நான்கு மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகள் குறித்து அதிரடியாகக் கருத்துகளைக் கூறி வருகிறார். இந்நிலையில் வழக்கறிஞர் தீலிப்குமார் என்பவர் பெங்களூரு 48-வது கூடுதல் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி ஒரு நபர் ஒரு இடத்தில் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால், நடிகர் பிரகாஷ்ராஜிடம் 4 மாநில வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தனது பெயரில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறார். இதுகுறித்து கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தேன். நடவடிக்கை இல்லை. எனவே, நடிகர் பிரகாஷ்ராஜ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படியும், நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வழக்கு தொடர்ந்திருந்தார். பிரகாஷ் ராஜ் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகும்படி ஏற்கனவே பிரகாஷ்ராஜுக்கு 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று சொல்லப்படுகிறது. , இதையடுத்து, நடிகர் பிரகாஷ்ராஜ் உடனே ஆஜராக நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரகாஷ்ராஜுவை பெங்களூரு காவல்துறையினர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்று தகவல் பரவிய நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜோ, தனது எக்ஸ் தளத்தில், "பொய்யான செய்திகளை உருவாக்கி பரப்புவதில் ஈடுபட்டு தங்களை விற்றுக்கொண்டவர்கள் பாவம், அவர்களுக்கு மிகவும் வேதனையாக இருந்திருக்க வேண்டும்… தங்களை விற்றுக்கொண்டவர்கள்... பொய்யான செய்திகளை உருவாக்கி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மிகவும் பாதிப்பும் வேதனையும் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களை நான் தொடர்ந்து பிஸியாக வைத்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி உள்ளது..." என்று பதிவிட்டு இந்தத் தகவலை மறுத்துள்ளார். தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto


