சென்னை, தங்கத்தை விட தரமான பால் தான் குழந்தைகளுக்கு இன்றைய தேவை என்று பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- தங்க மோதிரம் தேவைகளை முதலில் கவனியுங்கள் முதல்-அமைச்சரவர்களே. குழந்தைகளுக்கு தேவை பால். தங்க மோதிரம் கொடுக்கப் போகிறீர்கள் தரமான பாலுக்கான தட்டுப்பாடை எப்பொழுது சரி செய்யப் போகிறீர்கள். தங்கத்தை விட தரமான பால் தான் குழந்தைகளுக்கு இன்றைய தேவை. ஆவின் பால் சென்னை மக்களின் தேவை 30 லட்சம் லிட்டர்கள் ஆனால் ஆவின் 14.5 லட்சம் லிட்டர்கள் தான் ஆவின் விநியோகிக்கிறது. ஆவின் பால் பூத்துகளுக்கு செல்வதற்கு முன்னாலேயே அவை விற்று தீர்ந்து விடுகிறது அதிக விலை கொடுத்து தனியார் பால் வாங்க வேண்டி இருக்கிறது இதுதான் இன்று தமிழக மக்கள் சொல்வது. தங்கம் மோதிரத்தை விட தங்களது தேவை இன்று பால் தான். என்று குழந்தைகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைகளை முதலில் கவனியுங்கள் முதலமைச்சரவர்களே.@CMOTamilnadu. குழந்தைகளுக்கு தேவை பால். தங்க மோதிரம் கொடுக்கப் போகிறீர்கள் தரமான பாலுக்கான தட்டுப்பாடை எப்பொழுது சரி செய்யப் போகிறீர்கள். தங்கத்தை விட தரமான பால் தான் குழந்தைகளுக்கு இன்றைய தேவை. சென்னை மக்களின் தேவை 30… — Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) September 28, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/quality-milk-is-more-important-than-a-gold-ring-tamilisai-soundararajan



