சென்னை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:- தேர்தலல் வாக்குறுதி மாநிலம் முழுவதும் விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர் கடனில் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழுகடன் தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் கடன் பெற்ற விவசாயிகள் கடனில் பாதி தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி கொடுத்து, தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய். ஏமாற்றம் தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்யாமல், முதலில் 50 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு முழு தள்ளுபடி என்றும், அதற்கு பின் பல்வேறு விவசாய சங்கங்களின் போராட்டங்களுக்கு பிறகு அடுத்த அறிவிப்பில், 75000 வரை கடன் பெற்ற சிறு-குறு விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி என்றும், 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு கடன் பெற்ற தொகையில் வெறும் ரூ.35000 தள்ளுபடி என்றும் அறிவித்தது விவசாயிகளுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாகும். தள்ளுபடி எனவே, தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிபடி கூட்டுறவு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் தினந்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மாநில முதல்-அமைச்சர் இதனை கணக்கில் எடுத்து பயிர்க்கடனை இதுவரை தேர்தல் கால வாக்குறுதிப்படி தள்ளுபடி செய்வதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடாதது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. காத்திருப்பு போராட்டம் எனவே, 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நாளை சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திடுவதென்று முடிவு செய்துள்ளோம். இந்த பெருந்திரள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் அனைத்து பகுதி விவசாயிகளும், விவசாய சங்கங்களும், பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். விவசாயிகளுடைய கடன் தள்ளுபடிக்கான காத்திருப்பு போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/loan-waiver-over-15-farmers-associations-to-hold-sit-in-protest-in-chennai-tomorrow




