புனோம் பென், கிழக்கு கடற்படை செயல்பாட்டு பணியின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் குலிஷ்' ஏவுகணை ஏவுதள கப்பல் கம்போடியாவின் ரீம் கடற்படை தளத்திற்கு நேற்றுசென்றடைந்தது. கடல்சார் ஒத்துழைப்பு இந்திய கடற்படைக்கும், கம்போடிய கடற்படைக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளுக்கு இடையேயான தொழில்முறை உறவுகளை மேம்படுத்துவதையும் முதன்மை நோக்கமாக கொண்டு இந்த பயணம் அமைந்துள்ளது. உற்சாக வரவேற்பு கம்போடியா சென்றடைந்த இந்திய கப்பலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கம்போடிய கடற்படையின் உயர் அதிகாரிகள் மற்றும் கம்போடியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் நேரில் சென்று கப்பலின் பணியாளர்களை முறைப்படி வரவேற்றனர். ஐஎன்எஸ் குலிஷ் கூட்டு பயிற்சிகள் இந்த அதிகாரப்பூர்வ பயணத்தின்போது, இரு நாட்டு கடற்படை வீரர்களும் பங்கேற்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக, இரு நாட்டு பாதுகாப்பு சூழல் குறித்த தொழில்முறை கலந்துரையாடல்கள். இரு நாட்டு வீரர்களுக்கு இடையிலான நட்பு ரீதியிலான விளையாட்டு போட்டிகள். கட்டமைக்கப்பட்ட கடற்படை ஈடுபாடுகள் மற்றும் கூட்டு பயிற்சிகள் ஐஎன்எஸ் குலிஷ் இந்த நடவடிக்கைகள் மூலம் இரு நாட்டு கடற்படை பணியாளர்களும் தங்களது துறைசார் அறிவை பரிமாறிக் கொள்ளவும், கடலில் இரு நாடுகளின் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் பெரிய அளவில் வாய்ப்புகள் ஏற்படும் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/indian-navy-warship-ins-kulish-reaches-cambodia




