சென்னை, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- ஓமனில் தவித்து வந்த கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5 மீனவர்கள் மீட்பு தற்போது 5 மீனவர்களும் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான விசா காலாவதிக் கட்டண நடைமுறைகளை முறைப்படுத்தி, பாதுகாப்பாக தாயகம் அனுப்பி வைப்பதற்கான தூதரக நடவடிக்கைகள் அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர் அலுவலகம் தகவல் அனுப்பியது. அனைத்து மீனவர்களும் விரைவில் தாயகம் திரும்புவதை உறுதி செய்யத் தொடர்ந்து கண்காணிப்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/5-tamil-nadu-fishermen-trapped-in-oman-rescued-manickam-thakur-reports



