கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தின் முதல் பாடலாக ‘மயில்வீரா’ பாடல் நாளை வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘சர்தார்’. பி.எஸ். மித்ரன் இயக்கிய இப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமான ‘சர்தார் 2’ உருவாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வைரலானது சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோ மற்றும் டீசர் வெளியாகி வைரலானது. டப்பிங் பணியில் எஸ்.ஜே.சூர்யா ‘சர்தார் 2’ படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் எஸ்.ஜே.சூர்யா நிறைவு செய்துள்ளார். இது குறித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. முதல் பாடல் அப்டேட் இந்த நிலையில், ‘சர்தார் 2’ படத்தின் முதல் பாடலாக ‘மயில்வீரா’ பாடல் நாளை வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சாம் சிஎஸ் இசையமைப்பில் உருவாகும் 100-வது திரைப்படம் என்பதால் இப்பாடல் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/karthis-sardar-2-film-first-song-will-be-released-tomorrow




