வாஷிங்டன், 'காட்சில்லா வெர்சஸ் காங்' திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்ற இளம் அமெரிக்க நடிகை கெய்லி ஹாட்டில் (18), அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 'ஜியா' 2021-ம் ஆண்டு வெளியான 'காட்சில்லா வெர்சஸ் காங்' மற்றும் 2024-ம் ஆண்டு வெளியான 'காட்சில்லா எக்ஸ் காங்: தி நியூ எம்பயர்' திரைப்படங்களில், 'ஜியா' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கெய்லி ஹாட்டில் உலகளவில் பிரபலமானார். குறிப்பாக காங் உடனான அவரது உணர்வுப்பூர்வமான நடிப்பு ரசிகர்களின் மனதை கவர்ந்தது. சாட்டர்ன் விருது மேலும், 'காட்சில்லா எக்ஸ் காங்: தி நியூ எம்பயர்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, சிறந்த இளம் நடிகருக்கான சாட்டர்ன் (Saturn) விருதுக்கும் அவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ரசிகர்கள் அதிர்ச்சி இந்நிலையில், இளம் வயதிலேயே கெய்லி ஹாட்டில் உயிரிழந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/godzilla-vs-kong-actor-kaylee-hottle-passes-away-at-18




