ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற் றிக்கழக எம்.எல்.ஏ.வான அன்னை வி.ஜி.சரவணன் புதுக்குடியில் செயல் பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மொத்த கிட்டங்கியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வெளியே வந்த அவர், ரேஷன் பொருட்கள் ஏற்றப்பட்ட லாரியை ஆய்வு செய்தார். லாரியின் முன்புறம், பின்புறத்தில் இருந்த பதிவு எண்கள் அழிக்கப்பட்டு இருப்பதை கவனித்து லாரி டிரைவரிடம் கேட்டார். அதற்கு அவர், நான் இன்று தான் இங்கு வந்துள்ளேன். எனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார். அந்த லாரியின் டயர்கள் பழுதடைந்த நிலையில் இருந்தது. லாரியின் சட்டப்பூர்வ ஆவணங்கள், தகுதிச்சான்று, காப்பீடு உள்ளிட்டவை குறித்து சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து லாரி உரிமையாளரை, எம்.எல்.ஏ. செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால், போனை லாரி உரிமையாளரின் உதவியாளர் எடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் லாரி டயர் மிகவும் மோசமாக பழுதடைந்து உள்ளது என்று எம்.எல்.ஏ. கேட்டார். அதற்கு பதில் அளித்த அந்த நபர், லாரிக்கு உரிமம் இருக்கிறதா? என பாருங்கள் என்று தெரிவித்தார். இப்படிதான் லாரியை ஓட்டுகிறீர்கள்? என்று எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அந்த நபர், லாரியை ஆய்வு மட்டும் செய்யுங்கள், வேறு ஏதேனும் தகவல் வேண்டுமானால் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள் என்று சாதாரணமாக பதில் அளித்து இணைப்பை துண்டித்துவிட்டார். அந்த லாரி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் இங்கு வந்த பிறகு திருச்செந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்து இதற்கான தகவலை தன்னிடம் கூற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அன்னை வி.ஜி.சரவணன் எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். இந்த ஆய்வால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதுடன் சிறிது நேரம் பரபரப்பும் உண்டானது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/srivaikuntam-commotion-ensues-as-mla-inspects-lorry-loaded-with-ration-supplies




