சென்னை, செந்தில் பாலாஜி ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. என்.இளையராஜாவிடம், குதிரை பேரம் பேசியதாக செந்தில் பாலாஜி உள்பட பலர் மீது தொடரப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு குதிரை பேர வழக்கு விசாரணைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல செந்தில்பாலாஜி உள்பட பலர் மீது டாஸ்மாக் ஊழல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ், சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, அவருக்கு எதிரான விசாரணைக்கு மட்டும் இடைக் கால தடை உத்தரவை பெற்றுள்ளார். தடை நீட்டிப்பு இந்த இரு வழக்குகளும், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு வழக்குகளிலும் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசுத் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால், ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை எதுவும் விதிக்கவில்லை என்று நீதிபதிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடைகளை நீட்டித்தும், வழக்குகளின் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/stay-extended-on-cases-against-senthil-balaji




