சென்னை, ‘மாறுவேஷம்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், இத்திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சென்னை 28’, ‘சரோஜா’, ‘கோவா’, ‘மேயாத மான்’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் வைபவ். தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்துள்ளார். வைபவ் - அறிமுக இயக்குநர் கூட்டணி இந்த நிலையில், நடிகர் வைபவ் தற்போது அறிமுக இயக்குநர் ஸ்ரீனியுடன் இணைந்து ‘மாறுவேஷம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராம்கி, வியன்னா, ஜார்ஜ் மரியன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராஜ்குமார் அமல் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் ‘மாறுவேஷம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள அடுத்தடுத்த பாடல்களையும் படக்குழு வெளியிட்டது. பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு, படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. அக்டோபர் 1-ல் ரிலீஸ்! ‘மாறுவேஷம்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வைபவ் நடித்துள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. Mark your calendar. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/release-date-announced-for-the-film-maaruvesham-starring-vaibhav




