உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு இன்று நடைப்பெற்று வருவதால் மதுரையே விழா கோலம் பூண்டுள்ளது. கடைசியாக 08.04.2009 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு திருக்கோயிலில் உள்ள அனைத்துக் கோபுரங்கள் மற்றும் மண்டபங்களுக்கும் மராமத்துப் பணிகள், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து மீனாட்சியம்மன் கோவில் திருக்குடமுழுக்கு இன்று காலை நடைபெற்றது. சரியாக காலை 7.40 மணிக்கு கலசங்கள் மீது நன்னீர் ஊற்றபட்டது. அப்போது பக்தர்கள் 'மீனாட்சி சுந்தரேஷ்வர' என்ற கோஷம் விண்ணை முட்டியது. தொடர்ந்து 8.10 மணி வரை விமானங்கள் மற்றும் இராஜகோபுரங்களுக்கான குடமுழுக்கு நடைபெற்றது. கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கபட்டது. மேலும் 4 கோபுரங்களில் உள்ள கலசங்கள் மீது நன்னீர் ஊற்றபட்டு குடமுழுக்கு செய்யபட்டது. மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு குடமுழுக்கில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல்குமார், மதுரை பாரளுமன்ற உறுப்பின சு.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: ரூ 32 கோடி திருப்பணி. 17 ஆண்டுகளுக்குப் பின் கோலாகல கும்பாபிஷேகம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/spiritual/consecration-ceremony-held-amidst-chants-of-meenakshi-sundareswara-at-madurai




