கோவை, கோவையில் ஆடிட்டர் வீட்டில் ரூ.15 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருடிய வீட்டில் 5 நாட்கள் தங்கி சமைத்து சாப்பிட்டு தூங்கிச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆடிட்டர் வீடு கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்த சேஷகிரி (வயது 70), ஆடிட்டர். இவருடைய மகன் பெங்களூருவில் உள்ளார். எனவே அவர் தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடந்த மாதம் பெங்களூரு சென்றார். பின்னர் அவர் நேற்று முன்தினம் கோவை திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் கீழே சிதறி கிடந்தன. ரூ.15 லட்சம் நகை கொள்ளை பூஜை அறையில் இருந்த வெள்ளித்தட்டு, வெள்ளி பூஜை பொருட்கள், சமையல் அறையில் பயன்படுத்தும் வெள்ளி பொருட்கள் என 9 கிலோ வெள்ளி பொருட்களும், 7 கிலோ பித்தளை பொருட்களும் திருடப்பட்டு இருந்தது. அதன் மதிப்பு ரூ.15 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 6 பேர் கைது இது குறித்த புகாரின்பேரில் வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவையை சேர்ந்த வெங்கடேஷ்(45), ராஜசேகர்(37), டேவிட் லிவிங்ஸ்டன்(56), மணிகண்டன்(எ) விக்கி(26), மணிகண்டன்(எ) சிறுத்தைமணி(27), ஜமீசா(45) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளி, பித்தளை பொருட்கள் மீட்கப்பட்டன. திருடிய வீட்டில் 5 நாட்கள் தங்கி சமைத்து சாப்பிட்டு தூங்கிய கொள்ளையர்கள் இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஆடிட்டர் வீட்டை பூட்டிச்சென்றதை நோட்டமிட்ட 6 பேரும் கதவை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி உள்ளனர். அத்துடன் அவர்கள் திருடிய வீட்டில் 5 நாட்கள் வரை தங்கி இருந்து சமையல் செய்து சாப்பிட்டு, தூங்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்து 24 மணி நேரத்துக்குள் 6 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-robbers-stayed-in-the-house-they-robbed-for-5-days-cooking-eating-and-sleeping




