புதுடெல்லி, கால்பந்து உலகக் கோப்பையை 5 முறை வென்ற அணியான பிரேசில், அடுத்த மாதம் (அக்டோபர்) இந்தியா வந்து ஒரே ஒரு சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாடு கிறது. இந்தியா- பிரேசில் கால்பந்து அணிகள் முதல்முறை யாக மோதும் இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் அக்டோபர் 3-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. ஆஸ்திரேலியா சென்று வருகிற 25, 29-ந் தேதிகளில் இரண்டு நட்புறவு போட்டிகளில் ஆடும் பிரேசில் அணி, அந்த தொடர் முடிந்ததும் நேரடியாக இந்தியா வருகிறது. தரவரிசையில் 138-வது இடத்தில் உள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான பிரேசில் கால்பந்து அணியை பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி நேற்று அறிவித்தார். சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் 4 கோல்கள் அடித்த வினிசியஸ் ஜூனியர், முன்கள நட்சத்திரம் ரபின்யா. அதிக அனுபவம் வாய்ந்த மார்கினோஸ் உள்பட 26 வீரர்கள் அணியில் இடம் பிடித் துள்ளனர். பிரேசில் அணி வருமாறு:- கோல் கீப்பர்கள்: ஹூகோ சோய்சா, பெட்ரோ மொரிஸ்கோ. ஒடாவியோ பின்களம்: ஆர்துர்டியாஸ், டக்ளஸ் சான்டோஸ், கேப்ரியல் மாகல்ஹேயஸ், ஜார், மார்கினோஸ், மாத்யூஜின்ஹோ, மவுரோ ஜூனியர், விடோர் ரெய்ஸ், வெஸ்லி நடுகளம்: ஆந்த்ரே சான்டோஸ், பிரினோ பிடன், புருனோ குய்மராஸ், டேனிலோ சான்டோஸ், டக்ளஸ் லூயிஸ், கேப்ரியல் போன்டெம்போ முன் களம்: என்ட்ரிக் ஸ்டீபன், ஜோவ் பெட்ரோ. பெட்ரோ, ரபின்யா, ரேயான், சாமுவேல் லினோ, வினிசியஸ் ஜூனியர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/football/football-match-against-india-brazil-squad-announced




