கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் கடந்த செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். 'டோரதி' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக் சுப்புராஜிடம், "10 வருடங்களுக்குப் பிறகு நாங்கள்தான் நார்மல். நீங்கள்தான் சந்துக்களாகப் பார்க்கப்படுவீர்கள்” என்ற வசனம் சர்ச்சைக்குள்ளானது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. டோரதி அதற்கு பதிலளித்த அவர், " அவர்களை தவறாகப் பார்க்கும் நபர்களிடம் சொல்லக்கூடிய வசனம் தான் அது. இந்தப் படம் 90-களில் நடக்கக்கூடிய கதைக்களம். அந்த வசனத்தின் மூலம் சொல்ல வருவது என்னவென்றால் எங்களை மனிதர்களாக மதிக்காமல் இருக்கிறீர்கள். ஆனால் இன்னும் 10 வருடத்தில் எங்களையும் மரியாதையோடு பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த சமயத்தில் எங்களைத் தவறாக பார்த்தவர்களை சந்துவாகப் பார்ப்பார்கள் என்பது தான் அந்த வசனத்தின் அர்த்தம். அதைத்தான் படத்தில் சொல்ல வந்தோம் என்பது படம் பார்த்தவர்களுக்குப் புரியும். சிலர் படம் பார்க்காமல் தேவையில்லாத விவாதங்களைக் கிளப்பிவிடுகின்றனர். ட்விட்டர் உலகம் என்பது ரொம்பச் சிறிய உலகம். அதில் நீங்கள் சொல்வது போல் விமர்சனம் செய்பவர்கள் ஒரு சிறிய வட்டமே. ஆனால், சினிமா பார்க்கும் ரசிகர்கள் உலகம் என்பது மிகப்பெரியது. அதே ட்விட்டரில் படத்தைப் பற்றி நன்றாகவும்தானே நிறைய பேர் சொன்னார்கள்? அப்படியிருக்கையில் யாரோ நாலு பேர் சொன்னதையே கேட்டுக்கொண்டு அதையே கேள்வியாகவும் கேட்கிறீர்கள். கார்த்திக் சுப்புராஜ் திருநங்கைகள் பற்றி ஒரு கதை வருவதே ஒரு சிலருக்குப் பிரச்னையாக இருக்கிறது என்றால், அது அவர்களின் தனிப்பட்ட குணம் சார்ந்த பிரச்னை என்றும்தான் பேசுகிறார்கள். ‘டோரதி' படம் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நல்ல விஷயமாகவே பார்க்கிறேன்" என்று விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://cinema.vikatan.com/kollywood/karthik-subbaraj-about-dorothy-criticism




