சென்னை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”அடுத்தடுத்து இரண்டு அரசுப் பள்ளிகளில் நஞ்சான காலை உணவு! பிஞ்சுக் குழந்தைகளின் உயிருடன் விளையாடும் ஜோசப் விஜய் அரசுக்குக் கண்டனம்! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேலகண்டைப் பள்ளியில் காலை உணவில் பல்லி விழுந்து 11 பிஞ்சுக் குழந்தைகள் பாதிக்கப்பட்ட அதிர்ச்சி விலகுவதற்குள், அடுத்ததாகத் திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூர் நடுநிலைப் பள்ளியிலும் உணவில் பல்லி விழுந்து 36 மாணவச் செல்வங்கள் வாந்தி, மயக்கமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் ‘சத்துணவு வழங்குகிறோம்’ என்ற போர்வையில் பிஞ்சுக் குழந்தைகளின் உயிருக்கே உலை வைக்கும் கொடூரத்தை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அப்பட்டமாக அரங்கேற்றி வருகிறது. பள்ளிச் சமையலறைகளில் எவ்வித அடிப்படைச் சுகாதார ஆய்வோ, தரப் பரிசோதனையோ செய்யாத திறனற்ற தவெக ஆட்சியின் உச்சக்கட்ட நிர்வாகச் சீர்கேடே அடுத்தடுத்து அரங்கேறும் இந்த அவலங்களுக்கு முழுமுதற் காரணம். தவெக ஆட்சியில் நிர்வாகத் தோல்விகள் தொடர்கதையாகிவிட்டன; எங்கள் ஏழை, எளிய குழந்தைகளின் உயிரோடு விளையாடும் இந்த விபரீதத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தரமான உயர்சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய அலட்சியத்திற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது உடனடியாகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, போர்க்கால அடிப்படையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு மாணவர்களின் உணவுப் பாதுகாப்பை விரைந்து உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-condemns-the-provision-of-toxic-breakfast-in-government-schools




