உலகமே ஆவலோடு எதிர்பார்த்த அந்த கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவை வீழ்த்தி சாம்பியன் ஆகியிருக்கிறது ஸ்பெயின். Spain அர்ஜெண்டினா நடப்பு சாம்பியன். கடந்த உலகக்கோப்பையை போலவே இந்த உலகக்கோப்பையையும் மெஸ்ஸிக்காக வெல்ல வேண்டுமென ஒட்டுமொத்த அணியும் ஆடியது. மெஸ்ஸியும் ஒவ்வொரு போட்டியிலும் அணியை சிக்கலிலிருந்து மீட்ட நல்ல பார்மில் இருந்தார். இன்னொரு பக்கம் ஸ்பெயின் 2010 க்குப் பிறகு மீண்டும் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற முனைப்போடு வந்தது. டெக்னிக்கலாக வலுவான அணியாக ஸ்பெயின் முன் நின்றது. இரு அணிகளும் முனைப்போடு இறங்கியதால் இறுதிப்போட்டி மீது எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. நியூஜெர்ஸி ஸ்டேடியத்தில் நடந்த இந்த இறுதிப்போட்டியில் ஆட்டத்தின் முழு நேரமான 90 நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் அடிக்கவே இல்லை. ஆனால், ஸ்பெய்ன் அட்டாக் மோடில் இருந்தது. மேலே ஏறி ஏறி ஆடி அர்ஜெண்டினாவின் தற்காப்பு வட்டத்தை உடைத்து கோலை நோக்கி நிறைய ஷாட்களை அடித்திருந்தனர். ஆனால், அர்ஜெண்டினாவால் அந்தளவுக்கு அட்டாக் மோடுக்கு செல்ல முடியவில்லை. Messi, Lamine Yamal அர்ஜெண்டினாவின் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ்தான் உயிரை கொடுத்து சேவ்களை செய்து கொண்டிருந்தார். ஸ்பெயினின் 11 Shot on Goal களை வெகு சிறப்பாக தடுத்த மார்ட்டினஸால் 106 வது நிமிடத்தில் விழுந்த அந்த 12 வது ஷாட்டை தடுக்க முடியவில்லை. நிக்கோலஸ் வில்லியம் கொடுத்த பாஸை பெர்ரன் டார்ரஸ் மிகச்சிறப்பாக கோலாக்கி ஸ்பெயினை 1-0 என முன்னிலை பெற வைத்தார். இந்த தொடர் முழுக்க எதிரணிதான் முதலில் லீட் எடுக்கும் என்பதால் அர்ஜெண்டினா ரசிகர்கள் கொஞ்சம் ஆசுவாசமாகவே இருந்தனர். ஆனால், மற்ற போட்டிகளில் நடந்த இறுதி நிமிட மேஜிக்குகள் இந்த போட்டியில் நிகழவில்லை. கடைசி அரை மணி நேரத்தில் பெர்ணாண்டஸ் இல்லாமல் அர்ஜெண்டினா 10 வீரர்களோடு ஆடியது. இறுதி நிமிடம் வரை மெஸ்ஸி Equaliser யை இறக்கிவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த முறை மெஸ்ஸியால் அதை செய்ய இயலவில்லை. கூடுதல் நேரமும் முடிந்தது. ஸ்பெயின் 1-0 என வென்றது. டார்ரஸ் ஸ்பெயின் ரசிகர்கள் மைதானத்தில் ஆர்ப்பரிக்க, மெஸ்ஸி தோல்வியின் அதிர்ச்சியில் மைதானத்தில் உட்கார்ந்தே அழுது கண்ணீர் சிந்தினார். 'அந்தத் தருணத்தின் நான் அதிகம் சிந்திக்கவில்லை. என்னை நோக்கி வந்த பந்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தினேன். அத்தனை ஸ்பானிஷ் மக்களுடைய மனவலிமையையும் சக்தியையும் காலில் திரட்டி அந்த கோலை அடித்துவிட்டேன்' எனப் பேசியிருக்கிறார் டார்ரஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://sports.vikatan.com/spains-106th-minute-shock-stuns-messi-argentina-lose-the-trophy-as-lionel-messi-breaks-down-in-tears




