புதுடெல்லி, சோப்புகள், ஷாம்புகள், பற்பசைகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கழிப்பறைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு, மத்திய அரசு புதிய பேக்கேஜிங் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு பொருள் சைவமா அல்லது அசைவமா என்பதை நுகர்வோர் அடையாளம் காண முடியும். வண்ணக் குறியீடுகள் பொதுவாக உணவுப் பொருட்களுக்கு மட்டுமே வண்ணக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அன்றாட தனிநபர் பராமரிப்பு பொருட்களுக்கும் அது கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் சிக்கலான ரசாயன பெயர்களை படித்துப் பார்க்காமல், தாங்கள் வாங்கும் சோப்பு அல்லது ஷாம்பு விலங்குக் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்டதா இல்லையா என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். சைவமா. அசைவமா. புதிய விதிகளின்படி, உற்பத்தியாளர்கள் பொருட்களின் மேற்புறத்தில் அந்தக் குறியீட்டை இடவேண்டும். இதன்மூலம், ஒருபொருளை வாங்கும் போது, அது சைவமாஅல்லது அசைவமா என்பதை எளிதில் அடையாளம் காண முடியும். இந்த அறிவிப்பில் சோப்புகள், ஷாம்புகள், பற்பசைகள் மற்றும் பிற அழகுசாதன மற்றும் குளியலறைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கும். இந்த மாற்றத்தை அறிமுகப்படுத்துவதற்காக, மத்திய அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய விதிகளின்படி, சைவப் பொருட்களில் பச்சை நிறப் புள்ளியும் (Green Dot), அசைவ பொருட்களில் சிவப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளியும் (Red or Brown Dot) இடம்பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அழகு சாதன பொருட்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்கும் நிறுவனங்கள் அது எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு விதிமுறை கட்டாயமாக்கப்பட்டது. தற்போது அத்துடன் புதிதாக இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது. செடிகள் தொடங்கி விலங்குகள் வரை பல இடங்களில் இருந்து மூல பொருட்கள் திரட்டப்பட்டு தான் வகை வகையான சோப்பு, ஷாம்பு மற்றும் பல அழகு சாதன பொருட்கள் தயாராகின்றன. இனி மக்கள் ஒரு பொருளை வாங்கும் போதே அது எதில் இருந்து தயாரிக்கப்பட்டது என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/soap-shampoo-veg-or-non-veg-a-dot-on-the-pack-will-now-tell-you




